ஸ்ரீரங்கம் பெருமாள் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் புடவை உடுத்தி, நாச்சியார் கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் தாயார் படிதாண்டா பத்தினி என்பதால், சன்னதியை விட்டு வெளியே வரமாட்டார். ஆகவே, தாயாருக்கு பதிலாக சுவாமியே அவளது பிரதிபலிப்பதாக இக்கோலத்தில் காட்சி தருவதாக ஐதீகம்.