முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் ஹஜ்ரத் அபூபக்கர் நெய்னா முகமது ஒலியுல்லா ஆண்டகை தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நாச்சிகுளம் முகைதீன் பள்ளிவாசல் அருகிலிருந்து பூக்களால் ஜோடிக்கட்டப்பட்ட பூப்பல்லக்கு மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.