கல்லக்குடி ;புள்ளம்பாடியில் உள்ள குளுந்தாளம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் துவங்கியது. ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.