கீரமங்கலம்: கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பிடாரி அம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மழை வேண்டி மது எடுப்பு திருவிழா நடத்துவது வழக்கம். இந்த திருவிழா முடிந்த பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டுதலுடன் திருவிழா நடத்தப்படும். அதேபோல இந்த ஆண்டும் மது எடுப்பு திருவிழா நடந்தது. விழாவையொட்டி சில பொதுமக்கள் விரதம் இருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தென் னம் பாலைகளை குடங்களில் வைத்து மலர் அலங்காரம் செய்து, குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஓரிடத்தில் ஒன் றிணைந்து ஆட்டம், பாட்டத் துடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்..