திருச்சி :திருச்சி உறையூர் மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி கடந்த 30–ம் தேதி சுத்த பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நேற்று நடைபெற்றது. அப்போது புத்தூர் குழுமாயிஅம்மன் கோவில் மருளாளி சிவகுமார் பக்தர்கள் வேண்டுதலுக்காக வெட்டிய கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.