மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே மைவாடி மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடிமாரியம்மன் கோவில், இரண்டு நுாற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்து. தமிழகத்தில் பாளையங்கள் ஆட்சி நடந்த காலம் முதல் இந்த கோவிலில் வழிபாடு நடந்து வருகிறது.பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்கும் இக்கோவில் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் செய்து வழிபட்டனர். மடத்துக்குளம் பகுதியில் இந்த கோவிலில் தான் தேரோட்டம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இங்கு நடந்த தேரோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு கோவில் வாசலில் இருந்து புறப்பட்ட தேர், ஊரின் முக்கிய பகுதிகளை சுற்றி வந்து மாலை 5.00 மணிக்கு திரும்ப நிலைக்கு (கோவில் பகுதிக்கு) வந்தது. இந்த விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.