விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆதி சங்கரர் ஜெயந்தி விழாவையொட்டி, அவரது உருவப்பட ஊர்வலம் நடந்தது. சந்திரசேகரேந்திர சுவாமிகள் அவதரித்த தலமான விழுப்புரம் சங்கர மடத்தில் ஆதி சங்கரர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை அவரது படத்திற்கு சிறப்பு பூஜைகள், ஹோமம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. மாலை விழுப்புரம் சங்கர மடத்தில் இருந்து , அவரது உருவப்பட ஊர்வலம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்