Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குபேரன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை! ஆதி சங்கரர் ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1008 பால் குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2014
11:05

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது.செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 14ஆம் ஆண்டு 9 நாள் மகா உற்சவம் மற்றும் 5ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. அன்று காலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு நவசந்தி காப்பும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. மாலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 3ம் தேதி மாலை 1008 விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் பெண்கள் 1008 பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பகல் 11 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, விழா குழு மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இன்று காலை 9 மணிக்கு தேர்த் திருவிழா நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar