பதிவு செய்த நாள்
06
மே
2014
12:05
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் சுவாமி கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோயிலில், சைத்ரோத்ஸவ உற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடி பட்டம் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, எட்டு திசைகளுக்கும் பெளி சாதித்து,திவான் மகேந்திரன் தலைமையில்,நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. மாலையில் பெருமாள் சுவாமி மற்றும் பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஜெயராம் குருக்கள் தலைமையில், காப்பு கட்டு வைபவம் நடந்தது. இரவு சூரியப்பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக மே 8ல் பட்டாபிராம சுவாமியும், ஆதி ஜெகநாதப் பெருமாள் சுவாமியும் உபய கருட சேவை, மே 10 இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், மே 13 காலை 9 மணிக்கு தேரோட்டம், மே 14ல் சேதுக்கரையில் தீர்த்தம் சாதித்தல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.