கன்னிவாடி : தோணிமலை முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு பாலபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் நடைபெற்ற சிறப்பு பூஜையில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சஷ்டியை முன்னிட்டு வாலை, கிரியா சக்தி அம்மனுக்கு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.