பொதுவாக திருவிளக்கை தாய் என்று கிராமப்புறங்களில் குறிப்பது வழக்கம். குத்துவிளக்கை பெண்ணாகவே அனைவரும் கருதுகின்றனர். ஆனால் சில நூல்களில் இவ்விளக்கை விநாயகரின் வடிவம் என குறிப்பிட்டுள்ளன. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது விநாயகரை விளக்கில் ஆவாஹனம் செய்து, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டுவது இப்போதும் இருக்கும் நடைமுறைதான்.