கரூர் மாவட்டம் குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் முருகப் பெருமானின் பார்வையில் படும் வகையில் உள்ளன. பிரகாரத்திலுள்ள நவக்கிரக சன்னதியின் அருகிலுள்ள மதிலில் முருகன் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். உடன் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனை வணங்கி, செவ்வாய் கிரகத்திற்கு வஸ்திரம் சாத்தி பரிகார பூஜை செய்து வழிபடுவார்கள்.