ஐய்யாறப்பர் கோயிலில் சப்தஸ்தானப் பெருவிழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2014 12:05
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொ ந்தமான அறம்வளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தஸ்தானப் பெருவிழா வி மர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டு சப்தஸ்தான்ப பெருவிழா நேற்று கொடியேற்றத் துடன் தொடங்கி வரும் 16ம் தேதி ஏழுர் திருவிழா(சப்தஸ்தான விழா) நடை பெற உள்ளது. திருக்கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெ ய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி, அம் பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள திருவாவடுதுø ற ஆதீன கட்டளைவிசாரணை சுப்ரமணிய தம்பிரான்சுவாமிகள் முன்னிலை யில் திருக்கோடியேற்றம் நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது. சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி அம்பாள் சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் திரு வீதியுலா நடைபெறும். இதில் முக்கிய வி ழாவாக வரும் 13ம் தேதி திருத்தேரோட்டமும், 14ம் தேதி சித்ராபவுர்ணமி தி னத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். இதில் முக்கிய திருவிழாவான 16ம் தேதி ஏழுர் பல்லக்கு (சப்தஸ்தான விழ õ)அன்று அறம்வளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர், சித்தர்க்காடு திரிபுரசுந்தரி சமேத பிரும்மபுரீஸ்வரர், மூ வலூர் சவுந்திரநாயகி சமேத மார்க்கசகாயசுவாமி,சோழம்பேட்டை அறம்வ ளர்த்தநாயகி சமேத அழகியநாதர், துலாக்கட்டம் விசாலாட்சி சமேத காசிவி ஸ்வநாதர்,மாயூரம் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் ஆகிய 7கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பல்லக்கில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஐய்யாறப்பர் கோயிலை அடைந்து அங்கு திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் முன்னிலையில் சப்தஸ்தானபெருவிழா நடைபெறுகி றது. இதற்கான ஏற்பாடுகளை ஐய்யாறப்பர் சுவாமி வழிபாட்டு மன்றத்தினர் ம ற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.