வீரநாயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2014 12:05
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாயண பெருமாள் திருக்கோவில் பிரசோற்சவ விழா நேற்று கோலகலமாக துவங்கியது. காட்டுமன்னார்கோவில் ஸ்ரீ அருள்மிகு வீரநாராயண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா நேற்று கோலமாக துவங்கியது. காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விழாவை தொடர்ந்து 9ம் தேதி கருட சேவையும், 12ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் புஷ்பபல்லக்கும், முக்கிய விழாவாக திருத்தேர் வடம் பிடித்தல் 14ம் தேதியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயலர் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தோத்தாத்திரி ஆகியோர் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் யானை, குதிரை, காளை போன்ற வாகனங்களில் சாமி வீதியுலா ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். நேற்று காலை ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி தந்தார். 07கேஎம்கேபிஎச் 03, காட்டுமன்னார்கோவில் வீராணநாயண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா நேற்று துவங்கியதையடுத்து ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி தந்தார்.