திருவாடானை : திருவாடானை அருகே சூரம்புளி மாரியம்மன், ஓரிக்கோட்டை முத்துமாரியம்மன், கடம்பூர் மாரியம்மன் ஆகிய கோயில்களில் திருவிழாக்கள் நடந்தது. விழாவையொட்டி, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அம்மனுக்கு காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி கடன் செலுத்தினர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.