காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக கிரேன் மூலம் தகரத்தால் ஆன ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இங்குள்ள, நளன் குளத்தில் நீராடி எள் தீபம் ஏற்றி சனிஸ்வர பகவானை வழிப்பட்டால் சனிதோஷம் குறையும் என நம்பிக்கை. இதனால், நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாருக்கு வருகின்றனர். தற்போது, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால். கோடை விடுமுறை காலத்தில் திருநள்ளாரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிடுவர். தற்போது, கோடை வெயில் மற்றும் கனமழையால். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்து பிரதான சாலை வரை கிரேன் மூலம் இரும்பு தகரத்தால் ஆன ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.