கிராம கோவில் பூசாரிகள் பேரவை: ஜூன் 7ம் தேதி மாவட்ட மாநாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2014 02:05
விழுப்புரம்: கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் விழுப்புரம் மாவட்ட மாநாடு அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம், விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை அமைப்பாளர் கலியமூர்த்தி, ஒன்றிய அமைப்பாளர் சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அமைப்பாளர் மாயவன் வரவேற்றார். மாநில நிர்வாக அறங்காவலர் சவுந்தரராஜன் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அரசின் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். வயது முதிர்ந்த கிராம கோவில் பூசாரிகளுக்கு 2,000 ரூபாய் மாத உதவித்தொகை வழங்கிட வேண்டும். கோவில் அருகிலேயே பூசாரிகளுக்கு வீடு கட்டித் தர வேண்டும். விழுப்புரத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி மாவட்ட மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்தலில், மாவட்ட அமைப்பாளராக சிலம்பரசன், இணை அமைப்பாளராக கலிய மூர்த்தி, ஒன்றிய அமைப்பாளர்களாக காத்தவராயன், பரசுராமன், சந்திரன், ராமமூர்த்தி, தாமோதரன், பழனி, முனுசாமி, ஒன்றிய இணை அமைப்பாளர்களாக ரத்தினம், பஞ்சமலை, வெள்ளக்குளத்தான் தேர்வு செய்யப்பட்டனர்.