பதிவு செய்த நாள்
09
மே
2014
02:05
கன்னிவாடி : கோனூரில், சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கரகம் பாலித்தலுடன் துவங்கி விழாவில், அம்மனுக்கு விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிராம ஊர்வலத்துடன், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விசேஷ பூஜைகளுக்குப்பின், அம்மன் கங்கை புறப்பாடு நடந்தது.
* கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியில், பாறை கன்னிமார் கோயிலில், மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. சாமி சிலைகள் கரகம் பாலித்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன. கோயில் பூசாாரி ராசு, ஊர் முக்கியஸ்தர்கள் முத்துச்சாமி, வெள்ளையன், ராமன், பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.