மீனாட்சி திருக்கல்யாணம்: 60 ஆயிரம் பேருக்கு விருந்து!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2014 10:05
மதுரை: மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் "தடபுடல் விருந்து இன்று (மே 10) காலை 8 மணிக்கு துவங்குகிறது. சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம், கோயிலின் வடக்கு மேற்கு ஆடிவீதி சந்திப்பில் இன்று (மே 10) காலை 10.30 மணிக்கு மேல் காலை 10.54 மணிக்குள் நடக்கிறது. பழமுதிர்சோலை திருவருள் பக்த சபை சார்பில், சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து காலை 8 மணிக்கு துவங்கி பக்தர்கள் வரும்வரை தொடர்ந்து நடக்கும். கடந்த ஆண்டு திருக்கல்யாண விருந்தில், 45 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு 60 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட உள்ளது. மாப்பிள்ளை அழைப்பு விருந்து, இப்பள்ளியில் நேற்று மாலை 6.30 மணிக்கு துவங்கியது. கேசரி, வெண்பொங்கல், போண்டா, சாம்பார் வழங்கப்பட்டன. திருக்கல்யாண ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் ஜெயராமன் செய்து வருகின்றனர்.