கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நினைத்ததை முடிக்கலாம்!
பதிவு செய்த நாள்
13
மே 2014 09:05
பொறுமையின் பிறப்பிடமான கும்ப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கும் புதன் அனுகூலமான பலன்களை தருவார். மே 24ல், சுக்கிரன் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். 3-ம் இடத்தில் இருக்கும் கேதுவும், 5-ம் இடத்திலுள்ள குருவும் நன்மைகளை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஜூன் 13-ந் தேதி குரு 6-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். குருபகவான் சாதமகற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மீனத்தில் விழுவதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சூரியன், செவ்வாய் நன்மை தரமாட்டார்கள். 9-ம் இடத்தில் இருக்கும் ராகு, சனி ஆகியோராலும் நன்மை ஏதும் கிட்டப்போவது இல்லை. கேதுவின் கருணை உங்களுக்கு கிடைக்கும். நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிக்கலாம். நல்ல பணப் புழக்கத்தை காண்பீர்கள். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். மே 24க்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். புதன் 4-ம் இடத்தில் இருப்பதால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜுன் 7,8ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வும், திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். பழைய கடன்கள் அடைபடும். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். கலைஞர்களுக்கு சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த பலனை காணலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.
நல்ல நாள்: மே15,16,17,18,21,22,23,26,27 ஜூன் 2,3,4,5, 6,11,12,13,14 கவன நாட்கள்: ஜூன்7,8. அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரரை வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் நடக்கும் சரபேஸ்வரர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
|