பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
ஆன்மிக நம்பிக்கையுள்ள மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன்மாதம்முழுவதும் நன்மைகளை தருவார். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால், எந்த விஷயத்திலும் அதிக கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட வேண்டும். ஆனாலும் உங்களின் தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போகாது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மிதுனத்தில் இருந்து, ஜூன் 13ல், 7-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி நடக்கும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.பண வரவுக்கோ, மகிழ்ச்சிக்கோ குறை இருக்காது. குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதே நேரம், அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கும். யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைத்து விட வேண்டாம். மே 28,29ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்கள் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். புதியஒப்பந்தங்கள் எளிதாக கிடைக்கும். புகழ், பாராட்டு தொடர்ந்து வந்து சேரும். உங்கள் வாழ்க்கையில் வசதிகள் பெருகும். பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு எந்த பாதிப்பும் வராது. மாணவர்கள் கடும் முயற்சி எடுத்தே படிக்க வேண்டியது இருக்கும். வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமையும் என்பதால் எதையும் துணிந்து செயலாற்றுங்கள். விவசாயிகள்அதிக முதலீடுள்ள பயிரைத் தவிர்க்கவும். பெண்கள் கணவருடன் விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: மே15,16,19,20,24,25,30,31 ஜூன்1,2,3,9,10, 11,12,13
கவன நாள்: ஜூன்4,5,6 அதிர்ஷ்ட எண்: 6,8
நிறம்: வெள்ளை
பரிகாரம்: நரசிம்மர் கோயிலுக்குச் செல்ல தவறாதீர்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்தால் மன நிம்மதியும், வாழ்வில் வளமும் கிடைக்கும்.