பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
எதிர்த்து நின்று துணிச்சலுடன் போராடும் மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் 3ம் இடத்தில் நின்று குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார். சுக்கிரன் மே24ல், மேஷத்திற்கு மாறினாலும் தொடர்ந்து நன்மையே தருவார். உங்கள் ராசிக்கு 8-ல் இணைந்திருக்கும் ராகு,சனி ,7-ல் உள்ள செவ்வாய், 3-ல் உள்ள புதன், 2-ல் உள்ள கேது, ஆகியோரால் பலனை எதிர்பார்க்க முடியாது. குரு 4-வது இடமான மிதுனத்தில் இருந்து குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். அவர் ஜூன் 13ல், 5-ம் இடமான கடகத்திற்குச் செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் 5, 7-ம் பார்வைகளால், நன்மை கிடைக்கும். தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள்.செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும்.உடல் நலம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். சுக்கிரனால் பெண்கள் வகையில் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.மே 24க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு அரசின் சலுகை உண்டு. பணியாளர்களுக்கு அலைச்சல் ஏற்படும். உங்கள் பொறுப்புகளை வேறுயாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மே 24க்குள் சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வியாபாரம் சிறப்படையும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் பொருளாதார வளத்தில் சிறப்படைவர். பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கலாம். நகை வாங்கலாம்.
நல்ல நாள்: மே 24,25,28,29,17,18,19,20 ஜூன்4,5,6,7,8,14.
கவன நாள்: ஜூன் 9,10
அதிர்ஷ்ட எண்: 3,7
நிறம்: செந்தூரம், வெள்ளை
பரிகாரம்: சிவனை வழிபடுங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்து நன்மை அடையுங்கள். ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து
அர்ச்சனை செய்யுங்கள்.