கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா அலங்கார வளைவு திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2014 12:05
விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி ஏ.ஆர்.எம்., தொண்டு நிறுவனம் சார்பில் அலங்கார வளைவு திறப்பு விழா நடந்தது. ஏ.ஆர்.எம்., தொண்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு இணைந்து கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா விழுப்புரத்தில் நேற்று துவங்கியது. விழுப்புரம் கே.கே., ரோட்டில் நேற்று காலை 10:00 மணிக்கு கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா அலங்கார வளைவு திறப்பு விழா நடந்தது. ஏ.ஆர்.எம்., நிர்வாக இயக்குனர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். அலங்கார வரவேற்பு வளைவை சேர்மன் பாஸ்கரன் திறந்து வைத்து, எச்ஐவி சம்பந்தமான விழிப்பு ணர்வு பதாகைகளை வெளியிட்டார். எய்ட்ஸ் மற்றும் காசநோய் சம்பந்தமான விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரத்தை காசநோய் தடுப்பு திட்ட துணை இயக்குனர் டாக்டர் சுதாகர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் லீலாகிருஷ்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மீரா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தனசேகர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் பிரேமா உட்பட திருநங்கைகள் சலீமா, பாவனா, சர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.