விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி விழா நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருமுதுகுன்றம் இசைச்சங்கம் சார்பில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி விழா, கடந்த 10ம் தேதி துவங்கியது. நிகழ்ச்சிக்கு, இசை சங்க செயலர் சபாநாதன், பொருளாளர் ஜெய்சங்கர், செயலர் விருத்தகிரி முன்னிலை வகித்தனர். ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த் துவக்கி வைத்தார். தொடர்ந்து புதுவை கணேசன், தண்டபாணி ஆகியோரின் நாதஸ்வரம், கேசவன், கண்ணன் ஆகியோரின் சிறப்பு தவில் இசையுடன் நாதஸ்வர மங்கல இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:45 மணியளவில் சென்னை உதிக்ஷணா சங்கீத வித்யாலயா குழுவினரின் பரத நாட்டியம் நடந்தது. பிரத்யங்கா பாட்டு, கஜேந்திர கண்ணன் மிருதங்கம், சுரேஷ் வயலின் வாசித்தனர்.