பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
குறிச்சி : சுந்தராபுரம் முத்துமாரியம்மன் கோவிலின் 33ம் ஆண்டு விழா முன்னிட்டு, இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. விழா கடந்த 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 6ம் தேதி கம்பம் நடுதலும், 9ம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தன. 10ம் தேதி மாறுவேட போட்டியும், ௧௧ம் தேதி சிந்தனை நகைச்சுவை பட்டிமன்றமும் நடந்தன. இன்று இரவு 9.௦௦ மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், அன்னதானமும் நடக்கின்றன. நாளை காலை 8.௦௦ மணிக்கு, குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகம், தீர்த்த குடம், பால் குடம் மற்றும் பூவோடுடன் ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைகிறது. ௧௫ம் தேதி காலை 9.௦௦ மணிக்கு, மஞ்சள் நீராட்டுடன் அம்மன் திருவீதி உலா துவங்குகிறது. 16ம் தேதி காலை 9.௦௦ மணிக்கு, குரு சங்கீத கலாஷேத்ரம் மற்றும் மாணவர்கள் வழங்கும் பக்தி இசை நிகழ்ச்சியும், 10.00 மணிக்கு, மகா அபிஷேக ஆராதனையும் நடக்கின்றன.