பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதில், சிவேலாகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் சனி பிரதோஷம் என்பதால், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சுவாமிகளை வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் மணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலங்கண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது.