வில்லியனுார்: மணவெளி கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத திருவேணீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வில்லியனுார் அருகே மணவெளி கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருவேணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக மூன்றாமாண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. விழாவில் 11ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், 7:30 மணிக்கு உற்சவர் உள் புறப்பாடு முடிந்து, இரவு 8:30 பக்தர்களுக்க பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நகர மக்கள் செய்தனர்.