மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2025 11:10
வாடிப்பட்டி; நாகமலை புதுக்கோட்டை நிலையூர் கால்வாய் கரையில் மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. இங்கு 35ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி வேள்வி யாகம், அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன. விநாயகர், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், மலர்களால் அலங்காரத்தை அருணாச்சலம் பட்டர் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாகமலை ஆனந்த ஐயப்பன் கோயில் சபரி யாத்திரை குழு, ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.