பதிவு செய்த நாள்
14
மே
2014
12:05
திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில், நேற்று, சித்திரைத் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் மே 4ல் காலை கொடியேற்றி, இரவில் காப்புக்கட்டி, சித்திரைத் தேர் பிரமோற்சவம் துவங்கியது.தொடர்ந்து, தினசரி இரவில், பல்வேறு வாகனங்களில் சவுமியநாராயணப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியருடன் திருவீதி வலம் வந்தார். நேற்று காலை 8.10 மணிக்கு, தேரில் பூதேவி,ஸ்ரீதேவியருடன், பெருமாள் எழுந்தருளினர். தொடர்ந்து, பக்தர்கள் பெருமாளை தரிசித்து, அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் பங்கேற்றனர்.