பதிவு செய்த நாள்
14
மே
2014
12:05
கிருமாம்பாக்கம்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், தேர் திருவிழா நேற்று நடந்தது. தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் ஹம்சவாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், நாக வாகனம், கருட சேவை, யானை வாகனம், மங்களகிரி வாகனம், குதிரை வாகனங்களில் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 5.00 மணிக்கு பெருமாள் சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிங்கிரிகுடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6.30 மணிக்கு தேரடி உற்சவம், 10.00 மணிக்கு தீர்த்தவாரி அவரோகணம் நடந்தது. இன்று 14ம் தேதி மட்டையடி உற்சவம், நாளை புஷ்ப யாகம், 16ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், சுவாமி உள் புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், சிங்கிரிகுடி கிராம மக்கள் மற்றும் பிரெஞ்சு மானிய அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.