சென்னை: சென்னை, ஆவடி, அண்ணனூர், செல்வவிநாயகபுரம், அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாரதனை மற்றும் மகளிர், சிறுவர், சிறுமியர் ஆடல், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாண உற்சவம், உற்சவர் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் தர்மலிங்கம் ஆச்சாரி செய்திருந்தார்.