திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுடன் பூப்பல்லக்கிலும், தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனிவாய் பெருமாள் சிம்மாசனத்திலும் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்பினர். இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.