புதுச்சேரி: காமாட்சி அம்மன் கோவிலில், கிண்ணிரத விழா இன்று நடக்கிறது. புதுச்சேரி, பாரதி வீதியில் அமைந்துள்ள, காமாட்சி அம்மன் கோவிலில், கிண்ணிரத பிரம்மோற்சவ விழா, கடந்த 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், தினமும் மாலையில், அம்மன் வீதியுலா நடந்து வந்தது. சித்ரா பவுர்ணமியான இன்று மாலை, கிண்ணிரத பிரம்மோற்சவமும், பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது.