கோவை : சித்ரா பவுர்ணமியான இன்று, ஈஷா யோக மையத்தில், தியானலிங்கத்துக்கு வரும் அன்பர்கள், தங்கள் கரங்களாலேயே நீரும், பாலும் அர்ப்பணிக்கும் ஒரு அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. காலை 6:30 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரை பாலும், மதியம் 12:30 மணியிலிருந்து மாலை 8:00 மணி வரை நீரும் அர்ப்பணிக்கப்படுகிறது. பிரம்மாண்டமான இசை மற்றும் நாட்டியம் கொண்ட சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, லிங்கபைரவி தேவியின் உற்சவமூர்த்தி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, தியானலிங்கம் முன் மஹா ஆரத்தியுடன் நிறைவு பெறுகிறது.