பதிவு செய்த நாள்
14
மே
2014
02:05
ஸ்ரீபெரும்புதுார் : செங்காடு முத்துவீர சுவாமி திருக்கோவிலில், 37ம் ஆண்டு மதுரை வீரன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தீ மிதி திருவிழா நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளுர் சாலையில் அமைந்துள்ளது செங்காடு. இக்கிராமத்தில் முத்துவீர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், சித்திரை மாதம் திருவிழா, நடத்துவது வழக்கம். அதன்படி, 37வது ஆண்டு மதுரை வீரன் சித்திரை திருவிழா, கடந்த 11ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, அன்று மாலை 3:00 மணிக்கு, திருவேற்காட்டில் இருந்து கலசம் எடுத்து வரப்பட்டது.நேற்று முன்தினம், இரவு 9:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.தீ மிதி திருவிழாவை தொடர்ந்து, இன்னிசை கச்சேரியும், சிலம்பாட்டம், சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.