பதிவு செய்த நாள்
14
மே
2014
02:05
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியிலுள்ள பிறவி மருந்தீஸர் ஸ்வாமி கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, பிறவி மருந்தீஸர், பெரியநாயகியம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல, திருத்துறைப்பூண்டி, சிங்களாந்தி, மணிகண்டேஷ்வரர் கோவில், வேலூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், தண்டலைச்சேரி நீநெறி நாதர் ஸ்வாமி கோவில், நெடும்பலம் காசி விஸ்வநாதர் கோவில், கள்ளிக்குடி நாகநாத ஸ்வாமி கோவில், திருக்கொல்லிக்காடு அக்னிஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.