விவாக பஞ்சமி விழாவிற்கு தயாராகும் அயோத்தி ராமர் கோவில்; பக்தர்களை கவரும் சுவரோவியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2025 12:11
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். கார்த்திகை மாத சுக்லபட்சத்தின் ஐந்தாம் நாளில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோவில்களில் சீதா ராம கல்யாண வைபவம் நடைபெறும். இந்தாண்டு வரும் நவ., 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீராமர் பிறந்த ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர் வளாகத்தை தயார்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த த்வஜாரோஹண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர் என்பதால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திரின் சுவர்களில் பிரபு ஸ்ரீ ராமரின் தெய்வீக வாழ்க்கையின் காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்கள் பக்தர்களை கவர்ந்து வருகிறது. இவ்விழாவானது மிதிலாவின் தலைநகரான ஜனக்பூரில் ராமர் மற்றும் சீதையின் திருமணம் நடைபெற்றதால், அங்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.