சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2025 05:11
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்வர். கடந்த இரு செவ்வாய்கிழமைகள் பலத்த மழை பெய்ததால், பக்தர்களின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது. இன்று மழையில்லாததால், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால், சிறுவாபுரி கோவில் அமைந்துள்ள பகுதி முழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள கட்டண தரிசன டிக்கெட் வரிசையில், மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசித்து சென்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் மேற்பார்வையில், செயல் அலுவலர் மாதவன் தலைமையிலான அதிகர்ரிகள், கோவில் உட்புறத்திலும், ஆரணி போலீசார் கோவிலின் வெளிபுறத்திலும் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தி அனுப்பினர்.