விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூர் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று, திருவிளக்கு பூஜை நடக்கிறது. விழுப்புரம் வி.மருதூர் பவர் ஹவுஸ் ரோடு முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. இன்று காலை 9:00 மணிக்கு கிழக்கு பாண்டி ரோடு ராஜகணபதி கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைகிறது. காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு, பால் அபிஷேகமும், 11:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடக்கிறது. மதியம் அன்னதானம், மாலை 5:30 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், 108 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.