கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பெருமாள் கோவிலில் அன்னதான பெருவிழா இன்று நடக்கிறது. கச்சிராயபாளையம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மலை கோவிலில் 7 ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்னதான பெருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. பின், அன்னதானம் வழங்கப்படுகிறது.