காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்
திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், கோடை விடுமுறையை முன்னிட்டு, 10
நாள் சைவ சமய இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த
ஆண்டுக்கான இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு கடந்த 12-ம் தேதி
துவங்கியது. மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம்
தலைமை வகித்து வகுப்பைத் தொடங்கி வைத்தõர். வரும் மே 21-ஆம் தேதி வரை
தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை, 5, 6 பிரிவுகளாக சைவ சமயப்
பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.