Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேடந்தவாடியில் கூத்தாண்டவர் கோவில் ... சக்தி விநாயகர் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முகையூர் கள்ளழக பெருமாள் பாலாற்றில் இறங்கிய உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2014
02:05

மாமல்லபுரம் : முகையூர் கள்ளழக பெருமாள், பாலாற்றில் இறங்கும் உற்சவம், நேற்று, கோலாகலமாக நடந்தது. கூவத்துார் அடுத்த, முகையூர் கிராமத்தில், சுந்தரவல்லி தாயார் உடனுறை கள்ளழக பெருமாள் கோவில், பழமையான கிராம பொது கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி உற்சவம் நடைபெறும். சித்திரை பவுர்ணமி நாளான நேற்று, இந்த உற்சவம் விமரிசையாக நடந்தது.இதையொட்டி, கோவிலில், அதிகாலை 4:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மலர் அலங்காரம் செய்து, வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, காலை 7:00 மணிக்கு, கோவிலிலிருந்து புறப்பட்டு, கூவத்துார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றார்.அக்கோவிலில், ஆண்டாள் சூடிய மாலை வழங்கி, வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு, 9:30 மணிக்கு, வாயலுார் பாலாற்றை அடைந்தார். ஆற்றுநீரை புனிதப்படுத்தி, அந்நீரில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, ஆண்டாள் அளித்த மாலை அணிவித்து, மேளதாளம், வேதபாராயணம் முழங்க, வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, 10:45 மணிக்கு, குதிரை வாகனத்துடன், சுவாமி ஆற்றில் இறங்கி கடந்தார்.அவரை சுமந்து ஆற்றை கடந்து, வேப்பஞ்சேரி, கூவத்துார் ஆகிய பகுதிகளுக்கு சென்று, மண்டகப்படிக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை முகையூரை அடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித முன்னறிவிப்பின்றியும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் காலனி முத்து மாரியம்மன் கோவிலில் நந்தனார் சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar