சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், ஆகியவற்றை இறைவனுக்கு நைவேத்யமாக படைப்பதுண்டு. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிக்கு வித்தியாசமான ஒரு நைவேத்யம் படைக்கப்படுகிறது. அது தான் மாங்காய் ஊறுகாய். வில்வமங்கலம் சுவாமி என்பவர் ஒருமுறை அனந்த பத்மநாபனை வணங்க வந்தார். கையில் ஏதுமில்லை. மாங்காய் தான் இருந்தது. அதை வெட்டிகாரம் சேர்த்து படைத்து வணங்கினார். அன்றுமுதல் ஊறுகாய் படைக்கும் வழக்கம் ஏற்பட்டது. மாங்காய் ஊறுகாயை தேங்காய் மூடியில் ஆரம்பத்தில் வைத்தனர். இப்போது கிண்ணத்தில் வைக்கின்றனர்.