காசு துலாபாரம், தங்கம் துலாபாரம், பூக்கள் துலாபாரம் என்றெல்லாம் நீங்கள் கொடுத்திருக்கலாம். ஆனால், கேரளாவில் எர்ணாகுளம் - திருச்சூர் ரோட்டில் திருக்கூர் என்ற தலத்திலுள்ள சிவன் கோயிலில் தாம்புக்கயிறை (கிணற்றில் தண்ணீர் இறைக்க பயன்படுத்துவது) துலாபாரமாகக் கொடுக்கிறார்கள். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் இந்த வேண்டுதலை நிறைவேற்கின்றனர். ஒரு கயிறை மட்டும் இங்குள்ள மண்டபத்தில் கட்டுகின்றனர். வித்தியாசமான வழிபாடு தான்.