அசுரர்களை கொன்ற இறைவன்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததாக புராணங்களில் படித்திருப்பீர்கள். இந்த பிரம்மஹத்தி, திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்றதால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவனை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி நிற்பதாக சொல்கின்றனர்.