ஆலங்குடி கோயிலில் மே 28-ல் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2014 03:05
நீடாமங்கலம்
: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்
குருபரிகார கோயிலில் இந்தாண்டு குருபகவான் மிதுனராசியிலிருந்து கடக
ராசிக்கு ஜூன் 13-ம் தேதி முதல் பிரவேசம் செய்வதை முன்னிட்டு
குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா வரும் 28-ம் தேதி தொடங்கி
ஜூன் 5 வரை நடைபெறவுள்ளது.மீண்டும் குருபெயர்ச்சிக்குப் பின்னர் ஜூன்
16-ம் தேதி தொடங்கி ஜூன் 22-ல் 2-வது கட்டமாக லட்சார்ச்சனை விழா
நடைபெறவுள்ளது.மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து
கொள்ளலாம். காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், பின்னர் மாலை 4.30
மணி முதல் இரவு 8 மணிவரையிலும் லட்சார்ச்சனை நடைபெறும்.