செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் தியான மண்டபம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் முடிந்து, வரும் ஜூன் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இந்த திருப்பணியின் ஒரு பகுதியாக தியான மண்டபம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. தியான கூடத்தை 21 அடி அகலத்திலும், 91 அடி நீளத்திலும் அடுத்துள்ள வெளி பிரகாரத்தை 10 அடி அகலத்தில் 50 அடி நீளத்தில் அமைத்துள்ளனர். அஸ்திவாரம் முதல் மேல் தளம் வரை முற்றிலும் கருங்கற்களால், சுண்ணாம்பு கலவையை கொண்டு 30 லட்சம் மதிப்பில் பழமையான கட்டட முறையில் தியான மண்டபத்தை அமைத்து வருகின்றனர். நடுவில் தியான லிங்கம், தியான மண்டபத்தில் சீரான இடைவெளியில் 18 சித்தர்களின் சிலைகளையும் நிறுவ உள்ளனர். 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. சுற்று சுவர்கள், மேல் தளமும் கருங்கல் மற்றும் சுண்ணாம்பினால் கட்டியிருப்பதால் கடும் வெயில் நேரத்திலும் தியான மண்டபத்தின் உள்ளே வெப்ப தாக்குதலின்றி பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.