பதிவு செய்த நாள்
20
மே
2014
12:05
திருத்தணி : தணிகாசலம்மன் கோவிலில், 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. திருத்தணி, அக்கைய்யாநாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் முடிந்து, நேற்று முதலாம் ஆண்டு விழா மற்றும் 108 சங்காபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாக சாலை, 108 கலசங்கள் வைத்து கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், மஹா சண்டி ஹோமம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு, 108 சங்கா பிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தணி நகர முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.