விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் மழை வேண்டி நேற்று நடந்த விஷ்ணு சகஸ்ர நாமம் விழாவில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் சங்கரமடத்தில் <உலக நன்மை மற்றும் மழை வேண்டி கடந்த 15ம் தேதி அதிருத்ர சதசண்டி ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து தினந்தோறும் கணபதி பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது.நேற்று காலை 7:00 மணிக்கு ருத்ர ஜெபம், சண்டி பாராயணம் நடந்தது. மாலை 3:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6:00 மணி க்கு விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை தீபாராதனை நடந்தது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாகம் நடந்தது. மகாலட்சுமி ஸ்டோர்ஸ் ரமேஷ், வழக்கறிஞர் சுப்பிரமணியன், ஆடிட்டர் அனந்தராமன், அமைப்பாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.