பதிவு செய்த நாள்
20
மே
2014
12:05
திருப்புத்தூர் : திருப்புத்தூர், பூமாயி அம்மன் கோயிலில், பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் சுவாமியை தரிசித்து நேர்த்தி செலுத்தினர். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சிஅளித்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, பூத்தட்டுக்கள் எடுத்து வந்து நேர்த்தி செலுத்தினர். இன்று, காலை அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, பூச்சொரிதல் நடந்த பின், அம்மனுக்கு விசேஷ தீபாராதனை நடக்கும். இன்று, மாலை 7மணிக்கு, அம்மனுக்கு கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தபெருவிழா துவங்கும். பத்து நாட்கள் நø டபெறும் இந்த விழாவை முன்னிட்டு, அம்மன், தினமும் இரவு சர்வ அலங்காரத்தில் திருக்குளத்தை வலம் வருவார். மே 29 ல், பொங்கல் திருவிழா நடைபெறும்.